தமிழ்த்துறை விபரம்

தமிழ்த்துறை:

சிறப்பு மிக்க இக்கல்லூரியில் கடந்த 2010 ஆம் கல்வியாண்டு முதல் அறிவு அற்றம் காக்கும் கருவி என்னும் சிந்தனையை மையமாகக் கொண்டு தமிழ்த்துறை சிறப்புடன் இயங்கி வருகிறது. கடந்த 2010 ஆம் கல்வியாண்டு முதல் BA-தமிழ் பாடப்பிரிவும், கடந்த 2017 ஆம் கல்வியாண்டு முதல் MA-தமிழ் பாடப் பிரிவும் தொடங்கப்பட்டு மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருகிறது.

ஆசிரியர் திறன்:

தமிழ்த்துறையில் கூடுதல் தகுதியும்; ஆராய்ச்சி சிந்தனையும் கொண்ட பதின்மர் ஆசிரியப் பெருமக்களாக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருவதால், ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பட்டம் பெற்றுச் செல்கின்றனர். ஆசிரியப் பெருமக்கள் பல்வேறான நூல்களும், தேசிய /பன்னாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளும்; விருதுகளும் பெற்று ஒவ்வொரு காலச்சூழலிலும் தங்களை வளர்த்து வருகின்றனர். மேலும் தேசியத் தகுதித் தேர்வு-UGC-NET மற்றும் TNSET தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

அரசுப் பணிகள்:

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறையில் படித்துப் பட்டம் பெற்றுச் சென்ற மாணவர்கள் பள்ளி ஆசிரியர், இராணுவம், காவல்துறை, TNPSC போன்ற மத்திய/மாநில அரசுப் பணிகளில் சேர்ந்து கல்லூரிக்கும், தமிழ்த்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். பலரும் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர்.

கூடுதல் சிறப்பு:

தமிழ்த்துறை மாணவர்கள் பல்கலைக்கழக, மாவட்ட, மண்டல மாநில அளவில் நடைபெற்ற பல்வேறானப் போட்டிகளில் வெற்றி பெற்றுப் பரிசுகளும் விருதுகளும் பெற்றுத் தமிழ்த்துறைக்கு அழகு சேர்த்துள்ளனர்.

தொடங்கப்படவுள்ள நிகழ்வுகள்:
  • இலக்கிய மன்றம்
  • தமிழ்த்துறையில் நூலகம்
  • பயிலரங்கங்கள்
  • கருத்தரங்கங்கள்
  • *UGC-NET, TN-SET தேர்விற்கானப் பயிற்சி வகுப்புகள்
  • *மத்திய/மாநில அரசுப் பணிக்காகப் பயிற்சி வகுப்புகள்
S.No Name Designation Qualification Profile
1.
Dr. B. KATHIRVEL
Assistant Professor
M.A.,M.Phil.,Ph.D., UGC-NET
2.
Dr. P. SUGANESHWARAN
Assistant Professor
M.A.,M.Phil., UGC,NET.,Ph.D
3.
Dr. R. ELAVARASAN
Assistant Professor
M.A.,M.Phil., Ph.D.,