#

About DHARMAPURI

Dharmapuri is situated in the northwestern corner of Tamil Nadu and is bounded by Vytla Hills on the East, Nallampalli taluk on the South, Palacode taluk on the North and the Pennagaram taluk on the West. It is located between latitudes N 11 47’ and 12 33’ and longitudes E 77 02’ and 78 40’. The total geographical area of Dharmapuri district is 4497.77 km² which is 3.46% of Tamil Nadu.

 Dharmapuri was called Thahadoor when King Adhiyaman ruled the Kongu Nadu. Adhiyaman Kottai is available on salem highway. so many temples build in the period when Adhiyaman ruled. There is a subway from Adhiyaman kottai temple to Dharmapuri Kottai temple. Dharmapuri is located on one of the geographically important area in south India. It is 130 km away from Bangalore city and 300 km from State Capital Chennai. All the corporations in Tamilnadu except Thoothukudi and Tirunelveli lies within 300 km from Dharmapuri. Neighboring states cities like Bangalore, Mysore, Tumkur, Chittoor, Tirupathi, Thrissur, Palakkad, Puducherry also lie within a 300 km radius.

King Adhiyaman

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககாலக் மன்னர்களுள் ஒருவர். இவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர்.ஒருமுறை அதியமான் வேட்டைக்காக காட்டிற்குச் சென்ற பொழுது சில பழங்குடியினர் அரிய வகை கருப்பு நெல்லிக்கனியை கொடுத்தனர். அந்த அதிசய கனிக்கு இளமையை அளித்து நீண்ட நாள் வாழவைக்கும் மகிமை இருந்தது. தான் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தால் , தானும் தன் மக்களும் மட்டும தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் அக்கனியை அவ்வையார் உண்டதால் அவர் பாடும் பாடல்கள் மற்றும் எழுதும் நுhல்கள் மூலமாக தமிழ் வளர்வதோடு, பின் வரும் சந்ததினரையும் அது வாழவைக்கும் என்று நினைத்தாலே அதியமான் கனியை அவ்வைக்கு வழங்கினார்.

Subramaniya Shiva

சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 – 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் ‘ஞானபாநு‘ இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார்.

1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்தரஞ்சன்தாசை கொண்டு செய்வித்தார்.

Hogenakkal

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு. இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது. தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்.

குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது

உகுநீர்க்கல் உயிர்காவேரி
மிகுதானியம் தகவாய்வினை
பகுத்துண்பவர் எவராயினும்
மிகுநீர் அருள் மகவாய்க்கொள் கொளினே
உயிராய்ப் போற்றுவர் உயர்பண் பாடுவர்
தூயர்நீர் தெய்வத் தாய்நீ எனவே